குங்குமப் பூவில் ஒரிஜினலை கண்டுபிடிக்கவும் வழி இருக்கு.....

குங்குமப்பூ 90க்கும் மேற்பட்ட நோய்களின் அறிகுறிகளை தணிக்கக் கூடியது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது.

இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

நாம் வாங்குவது தரமான குங்குமப்பூவா இல்லையா என்பதை கண்டுபிடிக்க சிறிது சுடுதண்ணீரில் சில குங்குமப்பூவை போட வேண்டும்.

அது தரமான குங்குமப்பூவாய் இருந்தால் தண்ணீர் தங்க நிறமாக மாறும், அதுமட்டுமின்றி நல்ல வாசனையும் வரும். தரமற்ற குங்குமப்பூ எனில் தண்ணீர் சிவப்பு நிறமாய் மாறும்.

அடுத்ததாக அந்த குங்குமப்பூவை வாயில் வைத்துப் பாருங்கள். அதன் சுவை இனிப்பாக தெரிந்தால் அது போலியானது.

ஒரிஜினல் குங்குமப்பூ வாசனையில் மட்டும்தான் இனிப்பு வகை போன்று இருக்கும். ஆனால் அதன் சுவை ஒருபோதும் அப்படி இருக்காது.

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அதில் கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்து கலந்துவிட்டால் உடனே மஞ்சளாக மாறும். அது தான் ஒரிஜினல்.