கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடலாம்?
கருவுற்ற பெண்கள் மிக நல்ல உணவு சாப்பிட வேண்டும். பெண்கள் கருவுற்று மூன்று மாதங்கள் ஆனவுடன், பாலில் குங்குமப்பூ போட்டு குடிப்பது வழக்கம்.
குங்குமப்பூ பால் சாப்பிட்டால் குழந்தை நல்ல நிறமாக பிறக்கும் என்பது, ஒரு பொதுவான நம்பிக்கை.
அதில் பல நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. குங்குமப்பூ என்றால் அது வெறும் பூ மட்டுமல்ல, அந்த பூவில் உள்ள மகரந்தத்தைதான், நாம் குங்குமப்பூ என, சாப்பிடுகிறோம்.
கர்ப்பிணிகள் இதை பாலில் கலந்து சாப்பிடும் போது, குழந்தை நன்றாக வளர்ச்சி அடையவும், சுகப்பிரசவம் ஆகவும் உதவும் எனவும் நம்பப்படுகிறது
தலை பாரமாக இருந்தால் சுக்குடன் குங்குமப்பூவை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு மற்றும் ஞாபக சக்தி, குங்குமப்பூ சாப்பிடுவது மூலம் கிடைக்கும்.
அளவாக மூன்று எடுத்து கொண்டால் போதும். கர்ப்பிணிகள் மட்டுமல்ல, மற்ற பெண்களும் சாப்பிடலாம்.
ஆண்கள் சாப்பிட்டால் உயிரணுக்கள் விருத்தியடைந்து வீரியம் அடையும் எனவும் கூறப்படுகிறது.