அன்னாசி பூவில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்

ஸ்டார் வடிவ மசாலாப் பொருட்களில் ஒன்றான அன்னாசி பூ உணவுக்கு சுவையை கூட்டுவதுடன், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

இதில், வைட்டமின் ஏ மற்றும் சி, ஆன்டி ஆக்சிடன்ட்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

நுரையீரல் தொடர்பான நோய்கள், வாதநோய்களுக்குச் சீன மருத்துவத்தில் உணவாகவும், மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது

பசியை தூண்டி செரிமானத்தை எளிதாக்குவதுடன், வாயுத்தொல்லைக்கு தீர்வு அளிக்கிறது.

கல்லீரலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வீரியம் இதில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். கருப்பைக் கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும்.

அன்னாசி பூவிலுள்ள மருத்துவ பண்புகள், ஆழ்ந்த உறக்கத்தை தரும்.