ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பூண்டு! பூண்டு ஊறுகாய் செய்யலாமா!
பூண்டு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுப் பொருள்; கொழுப்பை விரைவில் கறைக்கும்.
சளி, இருமல் ஆகியவற்றுக்கும் அருமருந்து... என இப்படி பல நன்மைகள் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் பூண்டு.
இதில் உள்ள அலிசின் என்ற சல்பர் கலவை உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.
பூண்டு ஊறுகாய்:தேவையான பொருட்கள்: 1 கிலோ - சிறு பூண்டு, 4 டீஸ்பூன் - மஞ்சள் தூள், 8 டீஸ்பூன் - சிவப்பு மிளகாய்த் தூள்,
½ டீஸ்பூன் - வறுத்த வெந்தயப் பொடி, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு, 3 - எலுமிச்சை, 1 கப் - நல்லெண்ணெய்
முதலில் பூண்டின் தோலை முழுவதுமாக நீக்கவும். பின் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த பூண்டைப் பெரிய பாத்திரத்தில் மாற்றி, ஒவ்வொன்றாக அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும்.
பின்னர், கடாயில் எண்ணெய்யைச் சூடு செய்து, கடுகு தாளித்துப் பொரிந்தவுடன், பூண்டு, மசாலா கலவையில் சேர்க்கவும்.
பின் அதை நன்றாகக் கலந்து, இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும் . சுவையான பூண்டு ஊறுகாய் தயார். இதை பிரிட்ஜில் வைத்து 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.