நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த கோவைக்காய்!

கோவைக்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம், நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும்.

பெருங்குடல் மற்றும் செரிமான உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும்.

புற்றுநோய் வராமலிருக்க, உணவுடன் அடிக்கடி கோவைக்காய் சாப்பிடலாம். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை உணவில் சேர்த்து வர, கல்லீரலில் இருக்கும் கிருமிகள், நச்சுகள் வெளியேறி, கல்லீரல் வீக்கம் குறையும்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், இதை சாப்பிட்டு வர, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மேலும், சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை சத்துகள் வெளியேறுவதையும் தடுக்கும்.

உடலில் செரிமான அமிலங்கள் குறையும் போது, செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, வாரத்திற்கு இருமுறை கோவைக்காய் பொரியல் செய்து சாப்பிடலாம்.

கொழுப்பை கரைக்கக் கூடிய சக்தி கோவைக்காய்க்கு உண்டு. உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், கோவைக்காய் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இதன்இலை மற்றும் தண்டு கபத்தைப் போக்கும். இலை, தண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட கஷாயம், மார்புச்சளி, சுவாசக் குழாய் அடைப்பு ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.