கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... கை முறுக்கு ரெசிபி இதோ!

தேவையானப் பொருட்கள்: பச்சரிசி - 200 கிராம், வெண்ணெய் - 50 கிராம், சீரகம் - 1 டேபிள் ஸ்பூன், வறுத்து அரைத்து சலித்த உளுந்து மாவு - 2 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயத்துாள் - சிறிதளவு, உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

பச்சரிசியை, மூன்று மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து, மிக்ஸியில் பொடித்து சலிக்கவும்.

இந்த மாவை அகலமான பாத்திரத்தில் போட்டு, அதனுடன் வெண்ணெய், உளுந்து மாவு, சீரகம், உப்பு, பெருங்காயத்துாள் சேர்க்கவும்.

பின்னர், மாவை கொஞ்சம் கெட்டியாகப் பிசைந்து, சுத்தமான வெள்ளைத் துணியை பரப்பவும்.

பிசைந்த மாவை கையில் எடுத்து, விரல் இடைவெளி வழியாக மெல்லிய இழைகளாக முறுக்கிச் சுற்றவும்.

பின், அதை சூடான எண்ணெயில் போடவும். ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்தால், கை முறுக்கு ரெடி.