கோடையை உணவு முறை கொண்டும் சமாளிக்கலாம்!

நல்ல உணவு முறைகள் பின்பற்றினாலே கோடை வெயிலை சமாளித்து விடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உணவு கெடாமல் பாதுகாக்க சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், சுவையூட்டிகள், செயற்கை வண்ணங்கள் யாவும் கோடையில் தவிர்க்கப்பட வேண்டியவை.

இவையே புற்று நோய்களுக்கு காரணிகளாகும். துரித உணவுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவற்றை எப்போதும் தவிர்க்கலாம்.

அரிசி, கோதுமையில் தயாரிக்கப்படும் ஒரே வகையான உணவுகளை தினம் சாப்பிடுதல், ஒரே வகை ரீபைண்ட் எண்ணெய்யை தினமும் பயன்படுத்துவது தவறாகும்

பாரம்பரிய உணவு முறையில் கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவுகளை உட்கொள்ளவும்.

இதனால் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்கிறது.

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சவ்சவ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் வகைகள் சமையலில் அதிகம் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை, நெல்லி, கொய்யா மற்றும் கீரை வகைகளில் உயிர் சத்துக்களும், கால்சியம், இரும்பு சத்து, தாது உப்புக்கள் உள்ளதால் இவ்வற்றில் ஒன்றை தினமும் சாப்பிடவும்.