சுவையான மாதுளை பொரியல்: எப்படி செய்யணும் தெரியுமா?

மாதுளம் பழம் சுவையானது மட்டுமின்றி, சத்தானமும் கூட. மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன.

அதில் பொரியல் செய்து கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இதெல்லாம் தேவை: மாதுளை விதை - 1 கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, உளுந்தம் பருப்பு, துருவிய தேங்காய் - சிறிதளவு, கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் மாதுளை பழத்தை சுத்தம் செய்து, மாதுளை முத்துக்களை ஒரு கப் நிறைய எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு போட்டு வதக்கவும். பின், மாதுளை விதை, துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.

சுவை மிக்க, 'மாதுளை பொரியல்' தயார். பக்க உணவாக பயன்படுத்தலாம். ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவும் உண்ணலாம்.