கறிவேப்பிலை சூப் ரெசிபி ரொம்ப ஈஸி !
தேவையானப் பொருட்கள்: கறிவேப்பிலை - 2 கப், மிளகு - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்
- 2, தக்காளி - 2, பூண்டு - 4 பல், சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் -
6 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித்தழை, உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையானளவு.
வெண்ணெய்யை உருக்கி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, ஆறிய பின்அரைத்து பொடியாக்கவும்.
ஒரு கடாயில், சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு வதக்கி விழுதாக அரைக்கவும்.
இதில், தண்ணீர் கலந்து, அரைத்த பொடி, சர்க்கரை, உப்பு சேர்த்து கொதித்த பின் இறக்கவும்.
இப்போது, சுவையான 'கறிவேப்பிலை சூப்' ரெடி. கொத்தமல்லி தழை துாவி பரிமாறவும்.