நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?

பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, புரதம், செலினியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பேட் போன்ற பல சத்துக்கள் உள்ளன.

100 கிராம் பேரீச்சம்பழத்தில் 311 கலோரிகள் உள்ளது. மேலும் அதிக அளவு இயற்கை சர்க்கரையும் உள்ளது. இதனாலேயே நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் அதை உண்பதை முற்றிலும் தவிர்ப்பர்.

நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா?, வேண்டாமா? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழத்தை அளவோடு தான் உண்ண வேண்டும் என கூறப்படுகிறது.

இருந்தாலும் அவற்றை சிறிதளவு உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைப்பதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

கிளைசெமிக் குறியீடு 55 க்கும் குறைவான உணவுகளை நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். மேலும் பேரிச்சம்பழங்களின் கிளைசெமிக் குறியீடும் 42.8 முதல் 74.6 வரை தான் அதனால் உண்ணலாம்.

தினசரி ஒன்று முதல் இரண்டு பேரீச்சம்பழங்களை நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாம். மேலும் 3-4 வரை உலர் பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.