காபி பொடிக்கு வேறு பயன்களும் உண்டு!!

வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது. அந்த காபியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

குளிக்கும் அறையில் துர்நாற்றம் வருகிறது என்றால், சிறிதளவு காபி பொடியை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், துர்நாற்றம் நீங்கிவிடும்

வீட்டில் எறும்புள்ள இடத்தில் காபி பொடியை துாவினால், அவை வராமல் இருக்கும்

பாத்திரங்களில் வரும் முட்டை நாற்றத்தை போக்க, காபி பொடியை பயன்படுத்தி கழுவலாம்

தோட்டத்தில் சிறிது காபி பொடியைத் துாவினால், மண் சத்து நிறைந்தாக இருக்கும்.

ஏனெனில், காபி துாளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.