அகத்தை சுத்தப்படுத்தும் அகத்திக்கீரை நன்மைகள் அறிவோமா…

அகத்திக்கீரையில் புரதச்சத்து, தாதுஉப்புகள், மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகியன உள்ளன. இதன் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.

பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். வயிற்றில் உள்ள கெட்ட புழுக்களை அழிக்கிறது.

அல்சர் என்னும் வயிற்றுப்புண் குணமாகும். சுத்தம் செய்யப்பட்ட கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால், வயிற்றுப்புண் சரியாகும்.

தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு வதக்கி, விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். சொறி சிரங்கு முதலிய தோல் நோய்களை குணப்படுத்துகிறது.

அகத்தி கீரையில் சுண்ணாம்புச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

அகத்தி கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.

ஆண் மலட்டு தன்மை, விந்தணுக்கள் குறைபாடு போன்றவைகளுக்கு அகத்தி கீரை நல்ல தீர்வாகும்.

அகத்தி கீரையை மருந்து உண்ணும் காலத்தில் தவிர்த்தல் நல்லது. மேலும் மாதத்துக்கு இருமுறை மட்டுமே உண்ண வேண்டும் என கூறப்படுகிறது.