அரிசி சிறந்த மாற்று.. வரகரிசி… நன்மைகள் அறிவோமா!

சிறு தானிய வகைகளில் ஒன்றான வரகு அரிசி, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச்சத்து, பொட்டாசியம், 11 அமினோ அமிலங்கள் என பல சத்துகள் நிறைந்தது.

வரகு அரிசியில் மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் இதை அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்துகொள்ளலாம்.

வரகு அரிசியானது அதிக அளவில் நார்ச்சத்தினைக் கொண்டது. மேலும் இதில் இருக்கும் நயாசின் சத்தானது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.

சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கச் செய்கின்றது. நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் மட்டுமல்ல, ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்பை கொண்டிருப்பவர்கள் அவ்வபோது வரகரிசியை சேர்க்கலாம்

மூட்டுவலிப் பிரச்சினைகள், மூட்டு வீக்கம், எலும்புகள் வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது. குறிப்பாக பெண்களின் மெனோபாஸ் காலங்களிலும் மூட்டுவலி உபாதைக்கு மீட்பாக வரகு இருக்கும்.

உடல் சூட்டினைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது. கோடைக்காலத்தில் வரகு அரிசியை கூழ் போல் செய்து குடிக்கலாம்

கல்லீரல் அலற்சி, கல்லீரல் செயலினை மேம்படுத்துதல், நிணநீர் சுரப்பிகளை சீராக்கவும் உதவுகிறது.

வரகரிசியில் பிரியாணி, இட்லி, தோசை, பொங்கல் என வெரைட்டியாக செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.