நெல்லிக்காய் உடன் தேன் சேர்ந்தால் இத்தனை பலன்களா?
நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து, தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். அவற்றை குறித்து அறிந்துகொள்வோம்...
உடலில் தேங்கியுள்ள சளி அனைத்தும் வெளியேறி விடும்; தொண்டைப் புண்ணும் குணமாகும்
ரத்த சோகை உள்ளவர்கள், தினமும் ஒன்று வீதம், சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு ரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்
முடி கொட்டும் பிரச்னை தடுக்கப்பட்டு, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்
இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய் வருவதை தடுக்கிறது
முகப்பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்
செரிமான பிரச்னை மற்றும் பசியின்மையை சரி செய்கிறது
சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக குணமாகி விடும்.