உடலுக்கு நலம், பலம் தரும் லஸ்ஸி… ஜில்.. ஜில்.. கூல்.. கூல்…
கொளுத்தும் வெயிலுக்கு லஸ்ஸி ஒரு அமிர்த பானம் தான். தயிருடன் சர்க்கரை, தண்ணீர், சில நறுமணப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
புளிப்பில்லாத தயிரில் சர்க்கரை, ஏலக்காய், மிளகு, கிராம்பு சிறிதளவு சேர்த்து பருகினால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.
மாம்பழம், பாதாம் என தினமும் ஒர் சுவையில் ஒரு கிளாஸ் லஸ்ஸி சாப்பிட்டலாம். குறிப்பாக மதியப் பொழுதில் லஸ்ஸி குடிப்பது மிகவும் நல்லது.
லஸ்ஸி குடிப்பதன் மூலம் உடலுக்கு பொட்டாசியம், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, துத்தநாகம், போன்ற சத்துக்கள் கிடைக்கும்.
லஸ்ஸியில் உள்ள லாக்டிக் அமிலம், புரோபயாடிக் தன்மை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் திறன் அதிகரிக்கிறது.
மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.
லஸ்ஸியில் கால்சியம் அதிகமுள்ளதால் எலும்புகளும் பற்களும் வலிமையாகும். குறிப்பாக எலும்பு தேய்மானம் போன்ற நோய்களை தடுக்கும்.
குழந்தைகளுக்கு கடும் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு குறைக்க அடிக்கடி லஸ்ஸி கொடுக்கலாம்.
லஸ்ஸியை மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்துவது சிறந்தது. உடலை உடனே குளிர்விக்கும்.