பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன உணவு தரலாம்?
சிறுதானியங்கள், பாதாம், வேர்க்கடலை, தேன், காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குளிர் காலத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இது ஆரஞ்சுப் பழ சீஸன். ஆனால், சளி, ஜலதோஷம் இருப்பவர்கள், ஆரஞ்சைத் தவிர்த்துவிட்டு, ஆப்பிள் சாப்பிடலாம்.
இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற சுலபமாகச் செரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். இரவு உணவை சீக்கிரம் கொடுங்கள்.
கேக், பஃப்ஸ், பன் போன்ற பேக்கரி உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த ஸ்நாக்ஸ் கொடுப்பதைத் தவிர்த்து, நட்ஸ், உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
பாசிப்பருப்பு லட்டு, வேர்க்கடலை, எள்ளுருண்டை, தினம் ஒரு சுண்டல் என ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை தரலாம்.
பனிக் காலத்தில் நம் உணவையும் கொஞ்சம் மாற்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
குளிர் காலத்தில் பால் சரிவர ஜீரணமாகாது என்பதால், மிளகு, மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் தரலாம். கபம் வரமால் இருக்கும். தொண்டைக்கும் நல்லது.