ஹெல்த்தியான பீட்ரூட் கார பணியாரம்

தேவையான பொருட்கள்: துருவிய பீட்ரூட் - 1 கப், பெரிய வெங்காயம் - 1, இட்லி மாவு - 1 கப்.

வேர்கடலை பருப்பு - 25 கிராம், சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கருவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு

கடாயில் சிறிதளவு எண்ணெய் சூடானதும், சீரகம், துருவிய பீட்ரூட், நறுக்கிய மல்லி தழை, வெங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாய், வேர்க்கடலை பருப்பு, உப்பு போட்டு வதக்கவும்.

இவற்றை இட்லி மாவில் நன்றாக கலக்கவும்.

பணியார சட்டி சூடானதும், மாவு கலவையை ஊற்றி நன்கு வேக வைத்து எடுக்கவும்.

இப்போது, சுவையான சத்துகள் நிறைந்த பீட்ரூட் பணியாரம் ரெடி. அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.