ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த ராகி அல்வா
தேவையானப் பொருட்கள்: ராகி மாவு - 1 கப், பால் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 2 கப், தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - 1/2 கப், பால் 1/4 கப்,
முந்திரி பருப்பு, பாதாம் - சிறிதளவு, ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்.
கடாயில் சிறிது நெய் ஊற்றி, சூடானவுடன் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
பின், ராகி மாவை ஓரிரு நிமிடங்களுக்கு வாசனை வரும் வரை நன்றாக வறுத்தெடுத்து, தேவையான அளவு தண்ணீருடன் பால், ஏலக்காய் தூள், சர்க்கரையை கலக்கி வேக விடவும்.
கட்டிகள் எதுவும் இல்லாதவாறு கவனமாக கிளறி விடவும். அவ்வப்போது அடிப்பிடிக்காதவாறு நெய்யை விட்டு கிளறவும்.
இந்த கலவை கெட்டியான பதத்துக்கு வந்தவுடன், முந்திரி, பாதாம் பருப்புகளை தூவி இறக்கினால், சுவையுடன் கூடிய ஆரோக்கியமான ராகி அல்வா ரெடி.
ராகி அல்லது கேழ்வரகில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.