பொதுவாக, பருவநிலை மாற்றம், துாசு, மகரந்தத் துகள்களால் ஏற்படும் ஒவ்வாமையால், தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, தொண்டை கட்டு, மூக்கு ஒழுகல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
தொண்டை கரகரப்பை விரட்ட இதமான சூட்டில் சூப், ஹெர்பல் டீ போன்ற சுத்தமான, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால், சளி மென்மையாகி எளிதில் வெளியேறும். வீட்டில் செய்யக்கூடிய சில பாட்டி வைத்திய முறைகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
இஞ்சி சாறு, துளசி சாறு, தேன், சம அளவில் கலந்து குடிக்கலாம். இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி சேர்த்து, கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.
ஆடாதொடா இலை, வேர் சம அளவு எடுத்து, அதனுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் இருமல், தொண்டை வலி, காய்ச்சல் குணமாகும்
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவு கலந்த திரிகடுகு சூரணத்தை, தேன்னில் கலந்து தினமும், 1 - 2 கிராம் அளவு காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டால், தொண்டை வலி மற்றும் புண் குணமாகும்.
சூடான உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிக்கவும். உப்பு நீர் தொண்டை வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது,
புதினா டீ குடிக்கலாம். புதினாவில் மெந்தோல் சக்தி இருப்பதால் அவை கட்டியிக்கும் சளியை கரைத்து வெளியேற்றும்.
அதிமதுர டீ குடிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பை விரட்டி அடிக்கலாம். அதிமதுர தூளில் தேன் கலந்து உண்டாலும் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
மஞ்சள் மிகச்சிறந்த கிருமிநாசினி. பாலை சூடாக்கி அதில் மஞ்சளையும், மிளகுத்தூளையும் சேர்த்து இனிப்புக்கு பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.