சளி, காய்ச்சலுக்கு பார்லி கஞ்சி உகந்தது!

நீரிழிவு, இதய கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், டயட்டில் இருப்பவர்கள் ஆகியோருக்கு பார்லி தண்ணீர் நல்ல உணவு. மேலும் இதன் நன்மைகள் குறிந்து அறிந்துக்கொள்வோம்.

பார்லியில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது. சளி, காய்ச்சல் இருக்கும் போது இதன் கஞ்சியை குடித்தால் விரைவில் குணமாகும்.

பார்லி என்பது சிறுநீர்க் கழிவைத் தூண்டும் இயற்கையான ஒரு பொருள். குறிப்பாக சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும்.

பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கும். மேலும் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவும்.

இதிலிருக்கும் எளிமையாக கரையும் தன்மையுடைய புரதம், பித்தப்பை கற்கள் உண்டாகாமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது.

குடல் அழற்சி உள்ளவர்கள், காலை உணவாக பார்லி கஞ்சியைச் சாப்பிடலாம். உடலில் உள்ள நச்சுகள், கழிவுகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கும்.

இது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தவிர்த்து, உடல்பருமன் அதிகரிக்காமலும் பாதுகாக்கும்.

பார்லியில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் சத்துகள் எலும்பிகளை வலிமையாக்கும்.