தர்பூசணி அல்வா
தர்பூசணி பழத்தை (கால் பழம்) எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் அடித்து ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் இந்த ஜூஸை ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். குறைவான தணலில் நன்றாக கிளறவும்.
தொடர்ந்து, தேவையான அளவு சர்க்கரை, 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். விருப்பப்பட்டால், இதில் சிறிது நெய் சேர்க்கலாம்.
அல்வா பதம் வந்தவுடன் கடாயை இறக்கி விடவும். கலர்புல்லாக வேண்டுமெனில் ஃபுட் கலரிங் சேர்க்கலாம்.
பின், பாதாம், முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் தாளித்து கொட்டினால், இப்போது சுவையான தர்பூசணி அல்வா ரெடி.
ஒரு தட்டில் சிறிது நெய் தடவி சூடான அல்வாவை ஊற்றி, ஆற விடவும்.
சிறிது நேரம் கழித்து சதுரமாக, நீளமாக என தேவையான வடிவில் துண்டுகளாக்கி, விருப்பப்பட்டால் அதன் மீது உலர்ந்த தேங்காய் பொடியை தூவி பரிமாறலாம்.