கலர்புல்லான பீட்ரூட் அல்வா ரெசிபி
குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நறுக்கிய அல்லது துருவிய பீட்ரூட்டை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதில், சிறிது பால் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானவுடன் முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
அதே கடாயில், வேக வைத்த பீட்ரூட்டை பாலுடன் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து பால் சுண்டும் வரை நன்கு கிளறவும்.
பின், சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
கடாயில் பீட்ரூட் ஓட்டாமல் அல்வா பதத்துக்கு வரும் போது, சிறித்து நெய் சேர்க்கவும்.
ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை தூவினால், சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் அல்வா ரெடி.