வெள்ளை பூண்டில் உள்ள ஆலிசினதிற்கு இத்தனை பயன்களா!!
வெள்ளை பூண்டில், மரபு ரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு மற்றும் சத்துப் பொருட்கள் உள்ளன.
100 கிராம் பூண்டில், 5,346 மைக்ரான் அளவு, நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.
'தயோ சல்பினேட்' எனும் உயிர் பொருள், பூண்டில் உள்ளது. இது, பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து, 'ஆலிசின்' எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
'ஆலிசின்' சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகும். பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புகள் உள்ளன.
கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல், 'ஆலிசின்' மூலக்கூறுகளுக்கு இருப்பதாக, ஆய்வு தெரிவிக்கிறது.
ரத்தத் தட்டுகள் உறைந்து விடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும், 'ஆலிசின்' உதவுகிறது.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற, நோய் தொற்று நுண் கிருமிகளை ஒடுக்கும் பொருட்கள், இதில் உள்ளது.
இதய பாதிப்புகள், முடக்குவாதம் போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இரைப்பை புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல், பூண்டிற்கு உள்ளது.