உடலுக்கு ஊட்டம் தரும் ராகி உப்பு உருண்டை

தேவையானப் பொருட்கள்: ராகி மாவு - 1 கப், , எண்ணெய் - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, கடுகு - 0.5 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு- 1.5 ஸ்பூன்.

முருங்கைக்கீரை - கைப்பிடி அளவு, சீரகம், கடலைப்பருப்பு - தலா 1.5 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 1, தண்ணீர் - கப், உப்பு - தேவையானளவு.

அடுப்பில் கடாயை வைத்து, சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன், கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக பொரிய விடவும்.

அதில், பொடியாக நறுக்கிய ப.மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சியை வதக்கவும். தொடர்ந்து முருங்கைக்கீரை சேர்த்து, நன்றாக வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.

தண்ணீர் கொதிக்க துவங்கியதும், ராகி மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கி, கெட்டியான பதத்துக்கு வந்தவுடன், இறக்கி வைக்கவும்.

கை பொறுக்கும் அளவுக்கு சூடு ஆறிய பின், சிறு சிறு உருண்டைகளாகவோ அல்லது கொழுக்கட்டை போன்றோ பிடிக்கவும்.

அந்த உருண்டைகளை, இட்லி தட்டில் வைத்து மூடி, மிதமான தணலில் 10 நிமிடம் வேக வைத்தால், ராகி உப்பு உருண்டை ரெடி. காலை டிபன், ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.