புரதம் நிறைந்த டோஃபுவில் இத்தனை நன்மைகளா...

டோஃபு சோயாபீன் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவு. இதில் சாஃப்ட், சில்கென், ஃபர்ம், பெர்மெண்டெட் என பல வகைகளில் கிடைக்கும்.

இதில் புரதம், வைட்டமின்கள், மினரல்கள் கால்சியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீஸ், அமினோ அமிலங்கள் என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் டோஃபு எடுத்துக் கொண்டால் சிறுநீரில் வெளியேறும் புரதம் குறையும்.

மேலும் இதிலுள்ள ஐசோஃப்ளேவோன்கள் உடலில் இன்சுலின் ரெசிஸ்டன்சை குறைக்கவும், இன்சுலின் ஹார்மோன்களை ஒழுங்காக பயன்படுத்தவும் உதவும்

இதில் உள்ள புரதங்கள் எலும்புகளை வலிமையாக்கி, தேய்மானத்தை தடுக்கும். மேலும் எலும்புகளின் அடர்த்தி மேம்படுத்தும்.

இதில் உள்ள செலீனியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நம் மன நலனுக்கு உகந்தது.

டோஃபு கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) சீராக்க உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

எடையை குறைக்க விரும்புவோர் அவர்களது டயட்டில் டோஃபுவை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.