மணத்தக்காளி கீரை சட்னி ரெசிபி !
தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை - 2 கப், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கொத்தமல்லி விதை - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை, புளி கரைசல், நல்லெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.
ஒரு கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை மற்றும் காய்ந்த மிளகாயை வறுக்கவும்.
பின் மணத்தக்காளி கீரையை தனியே நன்றாக வதக்கவும்.
இதனுடன் உப்பு, புளி கரைசல், கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்தால், சுவையான மணத்தக்காளி கீரை சட்னி இப்போது ரெடி.
சூடான சாதம், இட்லி, தோசைக்கு சைடு டிஷ் ஆக பயன்படுத்தலாம். அஜீரணம், சளி தொல்லையை போக்கும்.