கொழுப்பை குறைக்க உதவும் குடம் புளி ஜூஸ்! ரெசிபி இதோ!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகம் விளையும் குடம் புளி, மீன் குழம்பு, ரசம் என, கேரள சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
சாதாரணமாக பயன்படுத்தும் புளியை விடவும் கடினமாக, கருப்பு நிறத்தில் இருக்கும்.
உடல் எடையைக் குறைப்பதற்கும், செரிமான பிரச்னைகளை சரிசெய்வதற்கும் குடம் புளியின் பயன் நல்லது என ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டு உள்ளது.
நுாறு கிராம் புளியை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
அது நன்கு ஊறிய பின் மிக்சியில் விழுதுக்காக அரைத்து எடுக்கவும்.
அத்துடன் கால் கிலோ வெல்லப் பாகு, ஒரு டீ ஸ்பூன் மிளகு, சீரகம், கறுப்பு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ளலாம்.
இந்த சாறை, ஒரு டம்ளர் நீருக்கு ஒரு ஸ்பூன் சேர்த்து தினமும் குடிப்பதால் உடல் எடை குறையும்.