உங்களை என்றும் இளைஞராக உணர... தேங்காய் சாப்பிடுங்கள்!

பச்சை தேங்காயை ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் எனலாம். தாமிரம், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.

பச்சையாக தேங்காயை டயட்டில் சேர்க்கும்போது, இதிலுள்ள கொழுப்பு சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது; சருமத்தை நீரேற்றமாகவும், மிருதுவாகவும் வைப்பதால் சுருக்கங்களை தவிர்க்கலாம்.

பசியை கட்டுப்படுத்தும் சிறந்த ஸ்நாக்ஸ் இது. கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். தேங்காயை மெல்லுவது முக தசைகளுக்கும் சிறந்த ஒர்க் அவுட் ஆகும்.

தேங்காயில் 61% நார்ச்சத்து உள்ளது. எனவே, இது குடல் ஆரோக்கியம் மற்றும் குடல் இயக்கத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் உள்ளதால், பச்சை தேங்காய் அனைத்து வகையான பிரச்னைகளிலிருந்தும் பாதுகாக்கக்கூடும்.

குறிப்பாக தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்லது.

இது அல்சைமர் எனும் மறதி நோய் மற்றும் பிற அறிவாற்றல் கோளாறுகளைத் தடுக்க உதவும் கெட்டோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.