உணவு ருசிக்க மணக்க சில டிப்ஸ்...
இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக இருந்தால், பச்சை அப்பளங்களை ஒரு நிமிடம் நீரில் போட்டு ஊறவைத்து அரைத்து, மாவில் கலந்து இட்லி சுட்டால், பூ மாதிரி இருக்கும்.
வாழைக்காயை சமைக்கும் போது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்து கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படாது.
கோதுமையை லேசாக வறுத்து, மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் கெடாது.
சர்க்கரை அல்லது வெல்லப்பாகு செய்யும் போது பதம் வந்தவுடன், எலுமிச்சை சாறு விட்டால், பாகும் முற்றாது; அழுக்கையும் எடுத்து விடும்.
கறிவேப்பிலையை வறுத்துப் பொடி செய்து எண்ணெய், உப்பு சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வர, கூந்தல் வளரும்; கண் பார்வை பொலிவு பெறும்.
பீர்க்கங்காய் தோலுடன் புளி, உப்பு, மிளகாய், வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரைத்து கடுகு தாளித்து சட்னி செய்யலாம்.
பனங்கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்பு போட்டு நன்கு வறுத்து பின், தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கிழங்கை போட விரைவில் வெந்துவிடும்.