வீட்டுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தரும் ரணகள்ளி!

ரணகள்ளி என்பது ஒரு செடி. ரணம் என்பது புண். அதை எளிதில் ஆற்றும் தன்மை வாய்ந்தது இந்த ரணகள்ளி செடி என்பதால், இந்த பெயர். இச்செடியை விலங்கினங்கள் சாப்பிடாது.

ரண கள்ளியின் இலையிலுள்ள பசை போன்ற திரவம், அதிக உவர்ப்புத்தன்மையும் அமிலத்தன்மையும் கொண்டது.

ரணகள்ளி இலை, தண்டு, வேர் என்று எந்த பகுதியை நட்டாலும், அதிலிருந்து செடி உருவாகும்.

இலையை நுாலால் கட்டி இறுக்கினால், ஒரு சில தினங்களில் வெட்டுப்பட்ட பகுதி செடியாக மாறி, தளிர்க்கும். அந்த அளவு இலையில் நீர்சத்து நிறைந்து காணப்படுகிறது

ரணகள்ளி இலைப்பசையை காயத்தின் மேற்பகுதியில் தடவினால், புண் எளிதில் குணமாகும்.

இதன் இலைச்சாற்றை மற்ற செடிகளின் மீது தெளித்தால், பூச்சிகள் செடிகள் பக்கமே வராது.

இதன் மலர்கள், வீட்டின் முகப்பை அழகுபடுத்துகின்றன. இதன் மணம், தீய உயிரினங்களை வீட்டினுள் நுழைய விடாமல், பாதுகாப்பாக இருக்கிறது.