புரதம் நிறைந்த முளைக்கட்டிய பயறு சாலட் ரெசிபி இதோ!
முளைக்கட்டிய பயறு சாலட் மிகவும் புரதம் நிறைந்தது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் ஒரு பவுல் எடுத்துகொள்ளலாம்.
எந்த தானியமாக இருந்தாலும் அதை நன்றாகக் கழுவி, எட்டு மணி நேரம் சுத்தமான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் மெல்லிய காட்டன் துணியில், ஊறிய தானியங்களை கட்டி நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்தால் எட்டு மணி நேரத்தில், பயிர்கள் முளைவிட துவங்கும்.
நீங்கள் 2-3 வகை முளைக்கட்டிய பயறுகளை எடுத்து, சிறிது வேகவைக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம், வெள்ளரி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைச் சேர்க்கலாம்.
உங்கள் சுவைக்கேற்ப சிறிது சாட் மசாலா மற்றும் உப்பு, எலுமிச்சை சேர்த்து உண்ணலாம்.