இந்த பொருட்கள் இருந்தால் இந்த பிரச்னை தீரும்!!
ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சிறிது சோடா உப்பையும் கலந்து குடித்தால், வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும்.
வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வேப்பிலை, மருதாணி, மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து குதிகால் வெடிப்பில் பூசி வந்தால், பித்த வெடிப்பு குணமாகும். இரவு படுக்க போகும்போது, இந்த மருந்தை போடுவது நல்லது.
மூட்டு வலிக்கிறது என்று சொல்பவர்கள், தேங்காய் எண்ணெயில் கற்பூர கட்டியை சிறிதளவு போட்டு கலக்கி, சூடுபடுத்திய பிறகு மூட்டுகளில் பூசி வந்தால், கீல் வாத வலி, மூட்டு வலி குணமாகும்.
கறிவேப்பிலையை துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தை போக்கும். சுக்கும், பனை வெல்லமும் போட்டு காய்ச்சிய நீரை குடித்து வந்தால், பித்தம் ஏற்படாது.
ஒரு தேக்கரண்டி மிளகு துாள், சிறிதளவு இஞ்சி, ஒரு பிடி துளசி இலை சேர்த்து கஷாயம் போல் செய்து சர்க்கரை, பால் சேர்த்து அருந்த, தொண்டை வலி, சாதாரண ஜுரம் ஆகியவை குணமாகும்.