சத்துகள் நிறைந்த உளுந்து புட்டு
தேவையானப் பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப், பொடித்த வெல்லம் - 1 கப்,
தேங்காய் துருவல் - 1 கப், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
உளுத்தம்பருப்பை வறுத்து ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் பொடியாக அரைக்கவும்.
இதில் தேவையானளவு உப்பு போட்டு, தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்தில் பிசையவும்.
பின், ஆவியில் வேக வைத்து வெல்லம், தேங்காய் சேர்க்கவும்.
இப்போது, சத்துகள் நிறைந்த, உளுந்து புட்டு ரெடி. அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.