ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பூசணிக்காய் ஜூஸ்
வெள்ளைப்பூசணியில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன.
இதில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் உடல் எடையை குறைக்க வெகுவாக உதவுகிறது.
கொலஸ்ட்ரால்அளவை கட்டுப்படுத்துவதுடன் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. பி.சி.ஓ.எஸ்., மற்றும் நீரிழிவு பிரச்னையை கட்டுக்குள் வைக்கிறது.
பூசணியின் பயன்கள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
எனவே, பூசணிக்காயுடன் ஒரு இன்ச் இஞ்சி, சிறிது எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு கலந்து ஜூஸாக குடிக்கலாம் அல்லது சூப் ஆக செய்தும் சாப்பிடலாம்.
இன்றைய அவசர யுகத்தில் காய்கறிகளை சமைக்க நேரம் இல்லாவிட்டாலும், ஜூஸாக சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாகும்.