ஆரோக்கியமான பூசணிக்காய் சப்பாத்தி ரெசிபி
        
இரண்டு கப் அளவுக்கு மஞ்சள் பூசணிக்காயை சிறிது சிறிதாக நறுக்கியோ அல்லது துருவியோ தனியே வைக்கவும். 
        
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள் பூசணிக்காயை 5 நிமிடம் வதக்கி, சூடு ஆறியவுடன் கைகளால் பிசையவும். 
        
பவுலில் 3 கப் கோதுமை மாவு, பூசணிக்காய், சிறிறு நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவையானளவு உப்பு, காரத்துக்கு சிறிது மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
        
பிசைந்த மாவை அரை மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.
        
பின், வழக்கமான முறையில் மாவை தேய்த்து, தோசைக்கல்லில் இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
        
இப்போது சுவையான, ஆரோக்கியமான பூசணிக்காய் சப்பாத்தி ரெடி.