வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்று தேடுறீங்களா… லிஸ்ட் இதோ …
வெள்ளைச் சர்க்கரை என்பது ரசாயனங்களின் மூலம் ப்ளீச் செய்யப்படுவது. 100 கிரா மில், 398 கலோரிகள் இருக்கின்றன.
வெள்ளைச் சர்க்கரையில் சல்ஃபர் அளவும் அதிகம். அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதால் வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைத் தவிர்ப்பதே நல்லது என கூறப்படுகிறது.
வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக வேறு சில ஆரோக்கியமான இனிப்பு பொருட்களை பயன்படுத்தலாம் என்கின்றனர் சர்க்கரை நோய் நிபுணர்கள்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகளவு இயற்கை முறையில் கரும்பில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இனிப்பு பொருள் நாட்டுச் சர்க்கரை.
பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும். இது ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும்.
தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் சர்க்கரை இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்தது. இதன் கிளைசிமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு(35).
பேரிச்சம்பழத்தை அதீத வெப்பத்தில் சுடவைத்து, பொடியாக்கி உலர்த்தினால் கிடைப்பது பேரிச்சை சர்க்கரை. உடல் கொலஸ்ட்ரால் அளவை பேரிச்சை சர்க்கரை கட்டுக்குள் வைக்கிறது.
மனித ரத்தத்தின் குணங்களை அச்சு அசலாக பெற்ற ஒரே இயற்கை பானம் தேன். இதை எடுத்துக்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.