ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்கும் கருப்பு கொண்டைக் கடலை!!
கருப்பு கொண்டைக் கடலையில் வைட்டமின் பி6, சோடியம், செலினியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன், ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், ரத்த கட்டிகள் உருவாவதையும் தடுக்கிறது.
அதுமட்டுமின்றி, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும், மெக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது, மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைக்கும்.
கருப்பு கொண்டைக் கடலையில் உள்ள இரும்புச்சத்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு அதிக நன்மைகளை தருகிறது. மேலும் பெண்களின் முகம் பளபளப்பாகும்.
சிறுநீர் பெருக்கியாக செயல்படும் பண்பு இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கருப்புக் கொண்டைக்கடலை வேகவைத்த சுடுநீருக்கு உள்ளது.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தினமும், ஒரு கைப்பிடி அளவாவது கொண்டைக் கடலையை சாப்பிடக் கொடுப்பது, ரத்த சோகை வராமல் தடுக்கும். அவர்களுடைய தசை வளர்ச்சியும் மேம்படும்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிட்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம். உடல் எடை குறைய உதவும்.