மஞ்சணத்தியின் மகத்தான பயன்கள்....!

மஞ்சணத்தியை நுணா, தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் தண்டு பகுதியை தோலை சீவினால் உட்புறத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சணத்தி மரம் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இந்த தாவரத்தை மருத்தாக எடுத்து வந்தால், நோயினால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும்.

இதன் இலை, காய், பழங்கள் அனைத்துமே வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கை தூண்டும். உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும்.

குழந்தைகளுக்கு வரும் கரப்பான், புண்கள், கழலை போன்றவற்றை குணமாக்கும்.

மஞ்சணத்தி காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பவுடரை கொண்டு தினமும் பல் துலக்கினால் சொத்தை வராது.

மஞ்சணத்தி இலையை அரைத்து புண்கள், சிரங்குகள் உள்ள இடத்தில் பூசினால் எளிதில் குணமாகும்.