மழைக்கால உணவு முறைகள் அறிவோமா!!

மழைக்காலத்தில் சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்.

உணவுப்பொருட்களை பாதுகாப்பான முறையில் மூடி பயன்படுத்த வேண்டும்.

உணவுகளை பிரிட்ஜில் வைத்து அல்லது பிரீசரில் வைத்து, மீண்டும் சூடு செய்து பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

மளிகை பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். பருப்பு, பயறு வகைகள், பிஸ்கட்டுகள், பால் பவுடர்கள், ரஸ்க் போன்றவற்றை, போதுமான அளவு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

மழைக்காலங்களில் வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். ஹோட்டல்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை, மழைக்காலத்தில் தவிர்க்கலாம்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளை, சமைக்கும் முன்பாக, உப்பு நீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும்; எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பொருட்களை, அதிகம் உட்கொள்ள வேண்டும்.

வீட்டில் சமைக்கும் அசைவ உணவுகளை, சுத்தமாக கழுவிய பின், உயர் கொதிநிலை அடைந்த பின்பே, உணவாக பயன்படுத்த வேண்டும்.