தீபாவளி ஸ்பெஷல்... கார்ன்ப்ளேக்ஸ் மிக்சர்
தேவையான பொருட்கள்: கார்ன்ப்ளேக்ஸ் - 1 கப், அவல் - அரை கப், வேர்க்கடலை - கால் கப், பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு, சிவப்பு மிளகாய்த்துாள் - - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 சிட்டிகை, உப்பு - 1 சிட்டிகை, வறுத்த பாதாம் - 7, பெருங்காயத்துாள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
கார்ன்ப்ளேக்சை முதலில் லேசாக பொரித்தெடுக்கவும். ரெடிமேடாக வறுத்த கார்ன்ப்ளேக்சையும் பயன்படுத்தலாம்.
கடாயில் சிறிது எண்ணெயை விட்டு சூடானவுடன், அவலை வறுத்து, கார்ன்ப்ளேக்சோடு சேர்க்கவும்.
இதே எண்ணெயில் பொட்டுக்கடலை, வேர்க்கடலையை சேர்த்து வறுத்து, கார்ன்ப்ளேக்சுடன் சேர்க்கவும்.
தனியாக ஒரு கடாயில் கறிவேப்பிலை, பெருங்காயத்துாள், சிவப்பு மிளகாய்துாள், உப்பு, சர்க்கரை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி, கார்ன்ப்ளேக்ஸ் கலவையோடு சேர்த்துக் கலக்கவும்.
இதன் மேல் லேசாக பொடித்த, கருப்பு ராக் சால்ட்டையும் சேர்க்கலாம். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, தேவையானபோது எடுத்து சாப்பிடலாம்.