இயற்கையா.. செயற்கையா? மாம்பழத்தை பார்த்து வாங்குவது எப்படி?
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் அதிகம் உள்ளன.
பொதுவாக மாம்பழங்கள் பழுக்க 5 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என்பதால், சிலர் லாப நோக்கதிற்காக ரசாயன முறையில் விரைவில் பழங்களை பழுக்க வைக்கின்றனர்.
இதற்காக பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு கற்கள், சிலிக்கான் உள்ளிட்ட ரசாயனங்கள் பயன்படுகிறது. இவை வயிற்றுப்போக்கு, வாந்தி ஒவ்வாமை உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
இது மாம்பழச் சீசன், நிறைய கிடைக்கும். அதனால் அதை வாங்கும் போது அவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்பதை கண்டறிவது வாங்குவது மிகவும் அவசியம்.
பார்ப்பதற்கு முழுக்க முழுக்க மஞ்சளாக இருந்தால் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டது.
பழுத்த மாம்பழம் கொஞ்சம் கொழகொழப்பாகத்தான் இருக்கும். மேலும் லேசாக அடிபட்டு, கசங்கி முறையான வடிவத்தில் இருக்காது.
மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கண்டிப்பாக கார்பைட் கல்லால் பழுக்கவைக்கப்பட்டது.
இயற்கையில் மாம்பழங்களின் காம்புப் பகுதிதான் கடைசியாகப் பழுக்கும். அதை வைத்தும் கண்டுப்பிடிக்கலாம்.
தண்ணீரில் பழங்களை ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் மீண்டும் ஒரு முறை நன்றாக கழுவி உட்கொண்டால் ரசாயனங்களின் வீரியம் குறையும்.