ஹெல்த்தியான பச்சை பட்டாணி நெய் தோசை ரெசிபி
தேவையான பொருட்கள்: தோசை மாவு - 2 கப், பச்சை பட்டாணி - 1 கப்,
கறிவேப்பிலை - 1 கப், பச்சை மிளகாய் - 3, பூண்டு பல் - 4, இஞ்சி, உப்பு மற்றும் நெய் - தேவையான அளவு.
வேக வைத்த பச்சை பட்டாணியுடன், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு அரைக்கவும்.
பின், தோசை மாவுடன் அரைத்த கலவையை நன்றாக கலக்கவும்.
தோசைக்கல் சூடானதும் சிறிதளவு நெய் தடவி மாவை ஊற்றவும். ஒருசில நிமிடங்களில் திருப்பி போட்டு நன்கு வேக விடவும்.
இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பட்டாணி நெய் தோசை ரெடி.
சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னி வைத்தால் சுவை அள்ளும்.