பசியை துாண்டும் பலாக்காய் கட்லெட்

பலாக்காயை கொட்டைகளை நீக்கி, மிக்சியில் லேசாக அரைத்து கொள்ளவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சீரகம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

பின், அரைத்து வைத்த பலாக்காயை சேர்த்து கிளறவும்.

தேவையானளவு உப்பு, மிளகாய் துாள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கிளறவும்.

அதன்பின் கலவையை சிறு, சிறு உருண்டைகளாக்கி தேவையான வடிவில் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

இப்போது, சுவையான பலாக்காய் கட்லெட் ரெடி.

புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் சேர்த்து உட்கொண்டால் சுவை அள்ளும்.