ஹெல்த்தியான கொள்ளு மிளகு குழம்பு!
தேவையானப் பொருட்கள்: கொள்ளு - 1 கப், காய்ந்த மிளகாய் - 6, உப்பு, கறிவேப்பிலை, கடுகு, பெருங்காய துாள் - சிறிதளவு, மிளகு, புளி, சீரகம், தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
கடாய் சூடானவுடன், கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு போட்டு நன்றாக வறுக்கவும்.
இவை ஆறியவுடன் புளி, சீரகம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த கலவையை கொட்டி கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து குழம்பு பதத்துக்கு வந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால், சத்தான 'கொள்ளு மிளகு குழம்பு' இப்போது ரெடி.
சாதத்துடன் பிசைந்து சாப்பிட, சுவை அள்ளும். அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.