பழக்கடையை அலங்கரிக்கும் சிம்லா ஆப்பிள்.. ஆப்பிள் பயன்கள் அறிவோமா!!

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன.

செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன், பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

ஆப்பிள் பழத்தில் உள்ள மாலிக் அமிலம், மலச்சிக்கலை நீக்கி, குடல் பாதையில் உள்ள நுண்கிருமிகளை கொல்கிறது.

மேலும், ஆப்பிளை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள நுண்கிருமிகள் அழியும்.

இதில், மாவு சத்து நிறைந்திருப்பதால், சர்க்கரை நோயாளிகள், தங்கள் சரிவிகித உணவுக்கு ஏற்றவாறு, மருத்துவரின் ஆலோசனையின்படி, ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் எடுத்துக் கொள்ளலாம்.

முதியவர்கள் ஆப்பிளை உண்ணும் போது, அதன் மேற்புறத் தோல் செரிக்க கடினமாக இருக்கும்; அதனால், அவர்கள், அதன் மேல்புற தோலை நீக்கி உண்பது நல்லது.

தினமும் ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால், டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று சொல்வர். அதனால் இந்த சீசனில் கிடைக்கும் சிம்லா ஆப்பிள்களை சுவைத்து மகிழ்வீர்.