மருத்துவ பயன்கள் நிறைந்த சங்கு பூ டீ!

சங்குப்பூ வேலிகள், தோட்டங்களில் காணப்படுவதுண்டு. இதன் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.

சங்கு பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, உடலில் உறைந்த கொழுப்பை கரைக்கும்.

நீரிழிவு உள்ளவர்களுக்கு உடலில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவும்.

உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது.

இதில் உள்ள அந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும்.

அஜீரண பிரச்னைகளை தீர்ப்பதுடன், வயிற்றில் உருவாகும் எரிச்சலையும் தடுக்கும்.

சங்கு பூ டீயில் உள்ள 'ஃப்ளேவனாய்ட்ஸ்' என்னும் ரசாயனம் புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்க உதவும்.