கார்த்திகை தீப ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை செய்யலாம் வாங்க...
நம் வீடுகளில் கார்த்திகை தீப பண்டிகைகளின் போது தவறாமல் இடம்பிடிக்கும் இனிப்பு என்றால் அது பால் கொழுக்கட்டைதான். அதன் ரெசிபி இதோ...
அரை கப் கொழுக்கட்டை மாவு, ஒரு தேக்கரண்டி நெய், வெந்நீர், 200 கிராம் வெல்லம், ஒரு டம்ளர் பால், ஏலக்காய் தூள், ஒரு தேக்கரண்டி தேங்காய் பால் ஆகியவற்றை தேவை.
கிண்ணத்தில் கொழுக்கட்டை மாவு அரை கப், ஒரு ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு மற்றும் சூடான தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒன்றரை கப் பால், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
பால் நன்றாகக் கொதித்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அவற்றில் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக வேகவைக்கவும்.
பதினைந்து நிமிடங்கள் வேகவைத்த பின்னர் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒன்றரை கப் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
வடிகட்டிய வெல்லப் பாகை வேகவைத்துள்ள பால் கொழுக்கட்டையில் ஊற்றி ஒருமுறை நன்றாகக் கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். சூடான, சுவையான பால் கொழுக்கட்டை தயார்.