ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமுள்ள உணவுகள் சில

உடலிலுள்ள செல்களை பாதுகாத்து நோய்களை கட்டுப்படுத்துவதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. எனவே, சரிவிகித உணவுடன் பழங்களையும் உணவில் சேர்க்க வேண்டும்.

டைப் - 2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதயநோய் போன்றவற்றைத் தவிர்க்கவும் இது உதவுகிறது. எனவே, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள் குறித்துப் பார்க்கலாம்.

ஊதா நிற முட்டைக்கோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இதை உரித்த உடனே சாப்பிட்டால் சத்துகள் முழுமையாக கிடைக்கும்.

கொய்யா பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இதை சாப்பிட இதய ஆரோக்கியம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டியதில்லை எனக் கூறுவர். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளன.

பீட்ரூட்டில் இரும்பு, பொட்டசியம் உட்பட பல்வேறு உயிர்ச்சத்துகள் உள்ளன. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

பச்சைக்கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள ஜீயாக்சாந்தின் மற்றும் லுடீன் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஊதா மற்றும் சிவப்பு நிறத் திராட்சை வகைகளில் வைட்டமின் சி, செலினியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. இவற்றை சாப்பிடுவதால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ராஸ்பெரியில் உள்ள சத்துகள் புற்றுநோய் செல்களை எதிர்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.