முட்டைக்கோஸ் துவையல் ரெசிபி இதோ

தேவையானப் பொருட்கள்: நறுக்கிய முட்டைக்கோஸ் - 1 கப், புளி, தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 5, சின்ன வெங்காயம் - 10.

முட்டைக்கோசை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து, நீரை வடிகட்டவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், நறுக்கிய இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்த்து வதக்கவும்.

ஆறியவுடன் வேகவைத்த முட்டைக்கோஸ் மற்று தேவையானளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

இப்போது ஆரோக்கியமான மற்றும் சுவையான 'முட்டைக்கோஸ் துவையல்' ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.