குட்டீஸை கவரும் கேரட் கீர்.. சுவையோ அள்ளும்... ரெசிபி இதோ

தேவையான பொருட்கள் : துருவிய கேரட் - ஒன்றரை கப், நெய் - ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு - 10, திராட்சை - 2 டீஸ்பூன், பால் - 4 கப், கேசரி பொடி - 1/4 டீஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு, பிஸ்தா - 2 டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பால் பொடி - 1/2 கப், ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

அடுப்பில் வாணலியை வைத்து, நெய்யை ஊற்றுங்கள். காய்ந்ததும் முந்திரி பருப்பு, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வையுங்கள்.

அதே வாணலியில், கேரட் துருவலை போட்டு அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

வதங்கிய பின் பால், கேசரி பொடியை போட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். கெட்டியாகும் வரை கொதிக்க வேண்டும்.

வேறொரு பாத்திரத்தில், வெண்ணெயை போட்டு சூடாக்குங்கள். கரைந்ததும் கால் கப் பாலை ஊற்றுங்கள்.

பாலும், வெண்ணெயும் நன்றாக கலந்த பின், பால் பொடியை சேருங்கள். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.

இதில் ஏற்கனவே கொதிக்க வைத்துள்ள பால், கேரட் கலவையை போட்டு நன்றாக கலக்குங்கள். சர்க்கரையும் தேவையான அளவு சேர்க்கும்.

ஏலக்காய் பொடியை போடுங்கள். வறுத்து வைத்துள்ள முந்திரிபருப்பு, பிஸ்தா, திராட்சையை போடுங்கள். சூடான, சுவையான கேரட் கீர் ரெடி.